இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனி, சென்னை இருங்காட்டுக்கோட்டையிலுள்ள மெட்ராஸ் சர்வதேச பந்தய களத்தில் (Madras International Circuit) அதிவேகமாக உந்துருளியை ஓட்டிச் சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த நாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விளம்பர நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்தடைந்த தோனி, ரேசிங் மைதானத்தில் அந்த நிறுவனத்தின் புதிய சில்லுகளைப் பரிசோதிக்கும் வகையில் அதிவேகமாக உந்துருளியை இயக்கியுள்ளார்.
பந்தய களத்தில் சுற்றுகளை நிறைவு செய்து 'பிட் லேன்' (pit lane) பகுதிக்கு திரும்பிய தோனி, தனது தலைக்கவசத்தைக் கழற்றி அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.
ஐ.பி.எல் போட்டிகளுக்குப் பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டு வரும் தோனி, தனது மோட்டார் சைக்கிள் ஆர்வத்தின் காரணமாக இந்த நிகழ்வில் உற்சாகத்துடன் பங்கேற்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் பதவியிலிருந்து விலகிய நிலையில், 2027ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே மீண்டும் அதிகரித்துள்ளது.
Latest News
உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு காவல்துறை குவிப்பு : கைது செய்ய வந்ததாக தகவல்
Local
04 August 2026
மெர்வின் சில்வாவின் வழக்குடன் நான் தொடர்புபடவில்லை! - அப்போது நான் பாடசாலை மாணவி: பிரபல நடிகை பகிரங்க அறிக்கை
Local
04 August 2026
ஈரானின் நிலைப்பாடு இரட்டை வேடம்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு
Local
04 August 2026
அப்பிள் அப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் திடீர் மாயம் – காரணம் என்ன?
Local
04 August 2026
பலத்த காற்று: கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தவெக சார்பில் இன்று போராட்டம்
Local
04 August 2026
கண்டி, நுவரெலியா, கேகாலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
Local
04 August 2026
அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு; ஒருவர் காணாமல்போயுள்ளார்
Local
04 August 2026
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு - அரசியலமைப்பில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
Local
04 August 2026
ஹட்டன் - கினிகத்தேனை வீதி வழமைக்கு
Local
04 August 2026