Sports04 August 2026

விராட் கோலி களத்தில் கோபப்படுவது ஏன்? உண்மையை உடைத்த நடுவர்!

விராட் கோலி போன்ற உத்வேகம் கொண்ட ஆளுமைகள் கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யத்திற்கு மிகவும் அவசியமானவர்கள் என முன்னாள் சர்வதேச நடுவர் அனில் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

"சின்ன வயதிலிருந்தே கோலியின் போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளதால் அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் கோபமாக நடந்துகொண்டாலும் அதில் எந்த துர்நோக்கமும் இருக்காது. சரியான தீர்ப்பு வழங்கினால் பாராட்டுவார். மைதானம் சுவாரஸ்யமாக இருக்க அவரைப்போன்ற வீரர்கள் அவசியம்" என அனில் சௌத்ரி குறிப்பிட்டார்.

 
Related recommendation
Hiru TV News | Programmes