Sports06 August 2026

இலங்கை வரவுள்ள சாய் சுதர்சன்: இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என எதிர்பார்ப்பு!

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் இந்திய அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான சாய் சுதர்சன், இந்த வார இறுதிக்குள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெருவிரலில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) தேசிய சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார் 

தற்போது அவர் மீண்டும் துடுப்பாட்ட பயிற்சியைத் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவக் குழுவின் இறுதி அனுமதி கிடைத்தவுடன் இலங்கை வந்து சேரவுள்ள நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி மைதானத்தில் தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் முழு உடற்தகுதியுடன் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என ஏதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes