Sports12 August 2026

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தனஞ்சய டி சில்வா தலைவராகவும், கமிந்து மெண்டிஸ் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உபாதை காரணமாக குசல் மெண்டிஸ் முதலாவது போட்டியில் விளையாடாத நிலையில், அனுபவமிக்க விக்கெட் காப்பாளர்–துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பெத்தும் நிஸ்ஸங்கவும் இந்த அணியில் இடம்பெறவில்லை.

துடுப்பாட்ட வீரர்களாக லஹிரு உதார, நிஷான் மதுஷ்க, தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டார மற்றும் சோனால் தினுஷ ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளர்களாக ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய ஆகியோருடன் கேஷர நுவந்தவும் இடம்பெற்றுள்ளார்.

வேகப்பந்து வீச்சுப் பிரிவில் மிலான் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025–27) சுழற்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes