உலகக் கால்பந்து அமைப்பான ஃபிஃபாவின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி (Chief Operating Officer) கெவின் லமூர் (Kevin Lamour) தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதன்படி, 2026 ஆகஸ்ட் 17 அன்று கெவின் லமூர் மற்றும் ஃபிஃபாவுடனான பணி உறவு முடிவுக்கு வந்துள்ளதாக ஃபிஃபா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அவரது இரண்டு ஆண்டு சேவைக்கு நன்றி தெரிவித்துள்ள ஃபிஃபா, வேறு கருத்துக்கள் எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.
ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino), உலகக் கிண்ணபோட்டித் தொடர்களின் வணிகப் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கும் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்திற்குத் திட்டமிட்டிருந்தார்.
இந்தத் திட்டத்திற்கு எதிராக கெவின் லமூர் பகிரங்கமாக குரல் கொடுத்தார்.
"ஃபிஃபா ஊழியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்" என்றும், இது "ஒரு தனிநபரின் நலனுக்கான திட்டம்" என்றும் அவர் சாடியிருந்தார்.
லமூரின் விமர்சனங்களுக்கு சில மணி நேரத்திற்கு முன்பு, இன்ஃபான்டினோவின் மூத்த ஆலோசகரான கார்லோஸ் கார்டிரோவும் (Carlos Cordeiro) இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியில் இருந்து விலகினார்.
இந்தநிலையில், நிர்வாகிகள், கால்பந்து கூட்டமைப்புகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்தே,உலகக் கிண்ணப் பங்குகளை விற்கும் இந்த சர்ச்சைக்குரிய திட்டத்தை ஃபிஃபா கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
டெய்லி மெயில் நிறுவனத்திற்கு 9.54 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளைச் செலுத்த இளவரசர் ஹரிக்கு நீதிமன்றம் உத்தரவு
Local
21 August 2026
வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை அன்னாசிப்பழங்கள்!
Local
21 August 2026
இஞ்சி அழுகல் நோய் அச்சுறுத்தல்: ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
21 August 2026
எல் நினோ வறட்சி அச்சுறுத்தல்: நீர் விநியோகச் சட்டங்களில் உடனடி திருத்தங்கள்!
Local
21 August 2026
மகாத்மா காந்தியின் தனிப்பட்ட சிந்தனைகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்: இந்திய வரலாற்றில் புதிய சாதனை!
Local
21 August 2026
வளையாபதி முதல் பத்மஸ்ரீ விருது வரை: காலம் கடந்து சாதனை படைத்த சௌகார் ஜானகி
Local
21 August 2026
பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் கடைசி உரை எனவும் அறிவிப்பு
Local
21 August 2026
அது வெறுப்பல்ல.. மகிழ்ச்சியான கேலி": இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் விளக்கம்
Local
21 August 2026
எரிபொருள் விலை உயர்வால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிப்பு - நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்
Local
21 August 2026
2026 இறுதிக்குள் 9 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அடைய முடியும் – நிதி பிரதி அமைச்சர்
Local
21 August 2026