பிரேசில் சீரி ஏ (Serie A) தொடரில் கோல் காப்பாளர்களின் நேரத்தை வீணடிக்கும் செயல்களைத் தடுக்கும் வகையில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதியின் கீழ், களத்திலிருந்து ஒரு நிமிடம் வெளியேற்றப்பட்ட முதல் வீரர் என்ற பெயரை சாண்டோஸ் (Santos) அணியின் தலைவரான நெய்மர் பெற்றுள்ளார்.
புதிய விதியின் கீழ், ஆட்டம் நடைபெறும் போது கோல் காப்பாளர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டால், போட்டி மீண்டும் ஆரம்பிக்கும் போது 1 நிமிடத்திற்கு ஒரு வெளிக்கள வீரரை (outfield player) பயிற்சியாளர் போட்டிக்குள் ஈடுபடுத்தவேண்டும்;.
பயிற்சியாளர் 10 வினாடிகளுக்குள் எந்த வீரரையும் குறிப்பிடத் தவறினால், அணியின் தலைவரே 1 நிமிடம் களத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பது விதியாகும்.
இந்தநிலையில், வாஸ்கோ டகாமாவுக்கு (Vasco da Gama) எதிரான போட்டியில் சாண்டோஸ் கோல் காப்பாளர் கேப்ரியல் பிராஸாவ் (Gabriel Brazão) மருத்துவ சிகிச்சை கோரிய போது, சாண்டோஸ் பயிற்சியாளர் 10 வினாடிகளுக்குள் எந்த வீரரையும் குறிப்பிடவில்லை.
இதனையடுத்து, நெய்மரை 1 நிமிடம் வெளியேறுமாறு நடுவர் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவத்திற்கு மத்தியிலும் சாண்டோஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்தப்போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த புதிய சோதனை விதி இங்கிலீஷ் பிரீமியர் லீக் உள்ளிட்ட பிற தொடர்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது.
Latest News
2032 ஆம் ஆண்டுக்குள் வணிக ரீதியான உற்பத்தியே இலக்கு: இலங்கையின் எண்ணெய் அகழ்வாராய்ச்சிக்கு சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் புதிய திட்டம்!
Local
27 August 2026
செம்மணி குறித்து சுயாதீன விசாரணைக்கு அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல்!
Local
27 August 2026
பிரபல ஹொலிவூட் நடிகர் டிம் கரி காலமானார்
Local
27 August 2026
இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்
Local
27 August 2026
அமெரிக்காவின் புதிய தடைகள் 'அரச மற்றும் பொருளாதார பயங்கரவாதம்' - ஈரான் கடும் கண்டனம்!
Local
27 August 2026
ஈரானில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது!
Local
27 August 2026
காஸா அமைதி சபை தோல்வியடைந்துவிட்டது- சர்வதேச அமைப்புகள் கவலை!
Local
27 August 2026
நீதித்துறைச் செயல்பாட்டை விரைவுபடுத்தவே புதிய திருத்தம்: ஜனாதிபதி திட்டவட்டம்
Local
27 August 2026
இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றித் தாயகம் திரும்பலாம்!
Local
27 August 2026
நுவரெலியா - கிரெகரி வாவியின் நீரை குடிப்பதால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!
Local
27 August 2026