பீஜிங்கில் நடைபெற்று வரும் உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகளில் சீனாவின் 'தியாங்கோங் அல்ட்ரா' (Tiangong Ultra) மனித வடிவிலான ரோபோ, 100 மீட்டர் தூரத்தை வெறும் 8.86 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் (Usain Bolt) 2009ஆம் ஆண்டு நிர்ணயித்த 9.58 வினாடிகள் என்ற மனித உலக சாதனையை விட இது 0.7 வினாடிகளுக்கு மேல் வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தத் தொடரின் ஆரம்ப நாளில் இதே ரோபோ 9.39 வினாடிகளில் 100மீற்றர் இலக்கைக் கடந்து உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்திருந்தது.
இந்தநிலையில், தற்போது அரையிறுதிப் போட்டியில் தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்து, 100 மீற்றர் துாரத்தை 8.86 வினாடிகளில் கடந்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் இதே ரோபோ 21.50 வினாடிகளில் இந்த 100 மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தது.
பீஜிங் ஹியூமனாய்ட் ரோபோ இன்னோவேஷன் சென்டர் (Beijing Humanoid Robot Innovation Center) தயாரித்துள்ள இந்த ரோபோ, பெரிய அளவிலான ரோபோக்களுக்கான பிரிவில் இந்த சாதனையைப் படைத்துள்ளது.
இந்தத் தொடரில் 666 அணிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கால்பந்து, நடனம் மற்றும் தொழில்துறைப் போட்டிகள் உள்ளிட்ட 51 பிரிவுகளில் போட்டியிட்டு வருகின்றன.
100 மீட்டர் ஓட்டம் மட்டுமின்றி, 400 மீட்டர் ஓட்டம், 1,500 மீட்டர், மற்றும் 2.88 மீட்டர் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட நான்கு மனித உலக சாதனைகளையும் இந்தத் தியாங்கோங் ரோபோக்கள் ஏற்கனவே முறியடித்துள்ளதாக இதன் தயாரிப்பு மையம் தெரிவித்துள்ளது.
Latest News
"ஹிந்தி சுத்தமா தெரியாது.. ஆனால் ஈழத் தமிழ் பேசுவேன்" : முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வெளிப்படையாகப் பேசிய விஷயம்!
Local
27 August 2026
ஹரி போட்டர் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி - 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில்!
Local
27 August 2026
ஐபோன் ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி : செப்டம்பரில் களமிறங்குகிறது அப்பிளின் புதிய படைப்புகள்!
Local
27 August 2026
கனடா வேலைவாய்ப்பு விசா காட்டிப் பெருமளவு மோசடி - ஹிரு CIA வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது!
Local
27 August 2026
நேபாள திடீர் வெள்ளப்பெருக்கு : 157 பேர் உயிரிழப்பு, 400-க்கும் அதிகமானோர் மாயம்!
Local
27 August 2026
தனது சாதனைகளை தொடர்ந்து புதுப்பிக்கும் எந்திரன் - இறுதிப் போட்டியிலும் சாதனை!
Local
27 August 2026
கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் வியக்கும் ஒரு விசித்திர சாதனை!
Local
27 August 2026
பாலஸ்தீன நடவடிக்கை (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடை!
Local
27 August 2026
கடமை நேரங்களில் சமூக வலைத்தளப் பயன்பாடு தொடர்பில் தொடருந்து ஊழியர்களுக்கு விசேட சுற்றுநிருபம்!
Local
27 August 2026
2032 ஆம் ஆண்டுக்குள் வணிக ரீதியான உற்பத்தியே இலக்கு: இலங்கையின் எண்ணெய் அகழ்வாராய்ச்சிக்கு சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் புதிய திட்டம்!
Local
27 August 2026