Sports28 August 2026

பெர்லின் மரதனில் இருந்து விலகிக்கொண்ட சாதனை வீரர்!

இரண்டு மணி நேரத்திற்குள் மரதன் ஓட்டத்தை நிறைவு செய்த உலகின் சாதனைக் வீரரான செபஸ்டியன் சாவே (Sebastian Sawe), காயம் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள பெர்லின் மரதன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த மரதன் செப்டம்பர் 27 அன்று பெர்லினில் நடைபெறவுள்ளது.

இதுவே, கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் மரதனில் 1 மணி 59 நிமிடம் 30 விநாடிகளில் இலக்கைக் கடந்து உலக சாதனை படைத்ததன் பின்னர், சாவேயின் முதல் பந்தயமாக இருந்தது.

எனினும் , "காயம் காரணமாக பெர்லின் மரதனில் இருந்து தாம் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று , 31 வயதான கென்யா நாட்டைச் சேர்ந்த சாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெர்லின் மரதனின் தட்டையான பாதை உலக சாதனைகளுக்குப் பெயர் பெற்றது. கடந்த 2025 பெர்லின் மரதன் போட்டியில் கடும் வெப்பத்தையும் தாண்டி 2:02:16 மணி நேரத்தில் சாவே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes