Sports01 September 2026

கிரிக்கெட் தெரிவுக்குழு தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்!

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்கு குழுவுக்கு எந்தவித வெளித்தரப்புத் தலையீடுகளும் இன்றி, முழுமையான சுதந்திரத்துடன் செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மறுசீரமைப்புக் குழுத் தலைவர் எரான் விக்ரமரத்ன மற்றும் உறுப்பினர் குமார் சங்கக்கார ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.

அணியைத் தேர்ந்தெடுப்பதில் அமைச்சர்களோ அல்லது நிர்வாகிகளோ எந்தப் பங்கும் வகிக்கக் கூடாது எனக் குறிப்பிட்ட எரான் விக்ரமரத்ன, கடந்த காலத்தில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது வீரர் ஒருவர் அரசியல் தரப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

தெரிவுக்குழுவினருக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டாலும், தலைமைப் பயிற்றுவிப்பாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் அணித் தலைவர்களுடன் அவர்கள் முறையான தொடர்பைப் பேண வேண்டும் என குமார் சங்கக்கார தெரிவித்தார்.

மேலும், இங்கிலாந்து சுற்றுப்பயணக் குழாம் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்வாளர்கள் ஊடகங்களைச் சந்தித்துத் தங்கள் முடிவுகள் குறித்து விளக்கமளிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes