இந்தியன் ப்ரிமியர் லீக் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிவுட் நடிகர் வின்டோ தாரா சிங் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதன்படி, ஆட்ட நிர்ணயத்தை மேற்கொண்டதாக கூறப்படும் பவான் ஜெய்ப்பூர், சஞ்ஜேய் ஜெய்பூர் என்ற இருவரையும் டுபாய்க்கு தப்பிச் செல்ல தாம் உதவியதை அவர் ஏற்றுக் கொண்டதாக மும்பை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஆட்டநிர்ணயம் தொடர்பில் தாம், 17 லட்சம் ரூபாவை வெற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ள தாரா சிங், இன்னும் அந்த பணம் தமக்கு கிடைக்க பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தாரா சிங்கின் வீட்டிலிருந்து ஆட்ட நிர்ணய காரரான பவான் ஜெய்ப்பூர் என்பவரின் கையடக்க தொலைபேசியும், தாரா சிங்கின் கணணி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை. தாரா சிங் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியளில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆட்ட நிர்ணயத்தில் ஈடுப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஸ்ரீசாந் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஒவர் ஒன்றின் போது, 14 ஒட்டங்களுக்கு மேல் வழங்குவதற்கு ஆட்டநிர்ணயகாரர்களிடம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதன்படி, முதல் ஐந்து பந்துகளிலும் அவர், 13 ஒட்டங்களை துடுப்பாட்டக்காரர் பெற்றுக்கொடுக்க உதவியுள்ளார்.
இறுதியாக 14வது ஒட்டத்தை துடுப்பாட்ட காரருக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் நோ போல் எனப்படும் சட்டவிரோத பந்து வீச்சை ஸ்ரீசாந் மேற்கொண்டார்.
எனினும், அந்த பந்து வீச்சை போட்டி நடுவர் அவதானிக்கவில்லை.
எனவே, ஸ்ரீசாந் ஆட்டநிர்ணய காரர்களிடம் ஒப்புக் கொண்டதன் படி 13 ஒட்டங்களை மாத்திரமே பணத்திற்காக பெற்றுக் கொடுக்க முடிந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Latest News
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் : 100 நாட்களுக்குப் பின் அமைதி ஒப்பந்தம்!
Local
15 June 2026
நாளை இரவு முதல் 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முற்றாகத் தடை!
Local
15 June 2026
விமல், கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்டோருக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை
Local
15 June 2026
சுரேஷ் சலேவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை; விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
15 June 2026
மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
15 June 2026
பந்து வீசும் முன்பே இலங்கை கணக்கில் 10 ஓட்டங்கள்: நடுவர்கள் எடுத்த அதிரடி முடிவு
Local
15 June 2026
யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!
Local
15 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு வெளியாகும் திகதி அறிவிப்பு!
Local
15 June 2026
இலங்கையின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சி : முதல் காலாண்டில் 5.1% உயர்வு!
Local
15 June 2026
அஜித்தை பாராட்டிய விஜய் : குடும்பத்துடன் கொண்டாடிய ஷாலினி!
Local
15 June 2026