ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Saturday, 23 August 2025 - 17:18

%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன இதனை உறுதிப்படுத்தினார்.

வைத்தியர்களின் ஆலோனைக்கமைய, ரணில் விக்ரமசிங்க தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நீதிமன்ற உத்தரவுக்கமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்றிரவு மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், இன்று பிற்பகல் அவர், மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கமைய, சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.