சொத்து மற்றும் வாகன விற்பனை: புதிய வரிச் சலுகை குறித்த முக்கிய அறிவிப்பு!

Wednesday, 24 June 2026 - 15:06

%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%3A+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
தனிநபர் குடியிருப்பு மற்றும் வாகன விற்பனை மீதான வரி விதிப்பு குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முக்கிய விளக்கமளித்துள்ளது.

ஒருவர் தனது குடியிருப்பு சொத்தை விற்பனை செய்யும் போது, அந்த சொத்தை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தனது சட்டப்பூர்வ உடைமையில் வைத்திருந்திருக்க வேண்டும்.

அத்துடன், அந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்திருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகள் பூர்த்தியாகும் பட்சத்தில், அந்த விற்பனைத் தொகையானது வரி விலக்கு அளிக்கப்படும்.

மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கு சொத்துக்களைப் பரிமாற்றம் செய்வதற்கு எவ்வித வரியும் கிடையாது.

மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்யும் போது மட்டுமே வரி பொருந்தும்.

கடந்த ஏப்ரல் 1, 2024 முதல் தனிநபர் வாகனங்களை விற்பனை செய்வதற்கான பழைய வரிமுறை நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாகனத்தின் வயது, நிலை அல்லது மாதிரி எதுவாக இருந்தாலும், தனிநபர் வாகன விற்பனையிலிருந்து கிடைக்கும் முழு இலாபமும் வரிச் சுமையின்றி முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.