சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் பாரிய வீழ்ச்சி

Thursday, 25 June 2026 - 10:58

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 157.62 அமெரிக்க டொலர்களால் (3.82%) வீழ்ச்சியடைந்து, 3,973.8 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அதேநேரம், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் 5.23 அமெரிக்க டொலர்களால் (8.43%) வீழ்ச்சியடைந்து, 56.75 அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.

உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் சரிவு, முதலீட்டாளர்கள் மத்தியில் அவதானத்தை ஏற்படுத்தியுள்ளது.