மெட்டாவின் புதிய AI ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம் : விலை எவ்வளவு தெரியுமா?

Wednesday, 24 June 2026 - 15:15

%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+AI+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%3A+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
சமூக வலைத்தளத் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, தனது புதிய AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரே-பேன் (Ray-Ban) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடி, பயனர்களின் அன்றாட தேவைகளை எளிதாக்கும் வகையில் பல்வேறு செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுற்றுப்புறத்தில் காணப்படும் பொருட்கள் மற்றும் இடங்களை அடையாளம் காணுதல், தகவல்களை வழங்குதல், மொழிபெயர்ப்பு சேவைகள், புகைப்படம் மற்றும் காணொளி பதிவு போன்ற அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பயனர்கள் கண்ணாடியை அணிந்தபடியே குரல் கட்டளைகள் மூலம் பல்வேறு தகவல்களைப் பெறுவதுடன், அன்றாட பணிகளை எளிதாக மேற்கொள்ளவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த AI ஸ்மார்ட் கண்ணாடியின் ஆரம்ப விலை 299 அமெரிக்க டொலர்கள் (சுமார் 28,300 இலங்கை ரூபாய்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் மேலும் நெருக்கமாக இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப தரப்புக்கள் தெரிவிக்கின்றன.