அரச திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை தொடர்பான விவகாரத்தை ஆராய நாளை கூடவுள்ள அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதது என அந்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
x பதிவின் ஊடாக அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “இலங்கையின் அரசியலமைப்பின் படி பொது நிதி மீதான முழுமையான கட்டுப்பாடு நாடாளுமன்றத்திடமே உள்ளது.
கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களைக் கண்காணிக்கும் நேரடிப் பொறுப்பு நிதிப் பற்றிய குழுவுக்கு உண்டு.
எனவே, திறைசேரி செயலாளர், குழு முன்னிலையில் முன்னிலையாவது அவரது விருப்பம் சார்ந்த விடயமல்ல, அது ஒரு அரசியலமைப்பு ரீதியான கடமையாகும்.
தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தால், அதனைச் சரி செய்ய அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் ஏன் ஓடுகிறார்? மறைப்பதற்கு என்ன இருக்கிறது?" என ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜே.வி.பி/என்.பி.பி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இந்தக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துவிட்டு, இப்போது இந்த பதவியை வகிக்கும் முதலாவது அரசியல்வாதி என்ற ரீதியில் அவருக்குப் கூடுதல் பொறுப்பு இருப்பதாக ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு மற்றும் சமநிலைத் தன்மையை மதிக்காத இந்த செயற்பாடு, மக்கள் எதிர்பார்த்த 'முறைமை மாற்றத்திற்கு' (System Change) இழைக்கப்பட்ட துரோகம் என அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) வழங்கப்பட்ட நல்லாட்சி தொடர்பான வாக்குறுதிகளை மீறும் செயலாகவும் இது அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வாரம் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளதால், அதன் பின்னர் சமுகமளிக்கலாம் என திறைசேரி செயலாளர் கூறியுள்ள காரணத்தை நிராகரித்துள்ள ஹர்ஷ டி சில்வா, அது தற்போதைய பிரச்சினைக்குத் தொடர்பற்றது எனக் கூறியுள்ளார்.
திறைசேரி செயலாளர் தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறினால், அதனைச் செய்யக்கூடிய ஒருவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் எனவும் ஹர்ஷ டி சில்வா தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Latest News
கட்சிப் பொறுப்புகளை துறந்தார் எரான்!
Local
29 April 2026
மராட்டியத்தில் தகிக்கும் வெயில்: வெப்பத்தாக்கத்திற்கு 109 பேர் உயிரிழப்பு - 3 இலட்சம் பேர் சிகிச்சை!
Local
29 April 2026
நாடாளுமன்றத்தின் முழுமையான கணகாய்வு அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிப்பு!
Local
29 April 2026
நாடாளுமன்றக் குழுவைப் புறக்கணிக்கும் திறைசேரி செயலாளர் – ஹர்ஷ டி சில்வா கடும் சாடல்
Local
29 April 2026
பிரபல இசையமைப்பாளர் மீது அத்துமீறல் குற்றச்சாட்டு: பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் பகிரங்க முறைப்பாடு
Local
29 April 2026
லண்டனில் இரு யூதர்கள் மீது கத்திக்குத்து: பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தீவிர விசாரணை
Local
29 April 2026
தொடரும் செம்மணி மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள்
Local
29 April 2026
தமிழக சட்டசபைத் தேர்தல்- தி.மு.க கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Local
29 April 2026
திறைசேரி செயலாளர் நாளை நிதி பற்றிய குழுவிற்கு வர மாட்டார் !
Local
29 April 2026
150 பில்லியன் டொலர் இழப்பீடு! OpenAI-ஐ மீண்டும் தொண்டு நிறுவனமாக மாற்ற ஈலோன் மஸ்க் முயற்சி!
Local
29 April 2026