மராட்டிய மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 20 வரையிலான காலப்பகுதியில் 109 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக அக்கோலா, நந்துர்பார் மற்றும் ரத்னகிரி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மாநிலம் முழுவதும் சுமார் 3.34 லட்சத்திற்கும் அதிகமானோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மும்பை மாநகராட்சிப் பகுதியில் நேரடி வெப்பத்தாக்கம் உறுதி செய்யப்படாவிட்டாலும், வெப்பம் சார்ந்த பிற உபாதைகளால் 108 உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையின் அதிரடி நடவடிக்கைகள்:
நிலைமை மோசமடைந்து வருவதால், மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளும் தயார்நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெப்பத்தாக்க நோயாளிகளுக்கென தனிப்படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
போதுமான அளவு ஓஆர்எஸ் (ORS) பாக்கெட்டுகள் மற்றும் குளிர்ந்த குடிநீர் வசதிகளை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
மெல்லிய மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.
தாகம் இல்லாவிட்டாலும் அதிகளவில் தண்ணீர் குடித்து உடல் நீர்ச்சத்தைப் பராமரிக்கவும்.
மயக்கம் அல்லது கடுமையான உடல் சோர்வு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமயைக்குச் செல்லவும்.
ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Latest News
கட்சிப் பொறுப்புகளை துறந்தார் எரான்!
Local
29 April 2026
மராட்டியத்தில் தகிக்கும் வெயில்: வெப்பத்தாக்கத்திற்கு 109 பேர் உயிரிழப்பு - 3 இலட்சம் பேர் சிகிச்சை!
Local
29 April 2026
நாடாளுமன்றத்தின் முழுமையான கணகாய்வு அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிப்பு!
Local
29 April 2026
நாடாளுமன்றக் குழுவைப் புறக்கணிக்கும் திறைசேரி செயலாளர் – ஹர்ஷ டி சில்வா கடும் சாடல்
Local
29 April 2026
பிரபல இசையமைப்பாளர் மீது அத்துமீறல் குற்றச்சாட்டு: பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் பகிரங்க முறைப்பாடு
Local
29 April 2026
லண்டனில் இரு யூதர்கள் மீது கத்திக்குத்து: பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தீவிர விசாரணை
Local
29 April 2026
தொடரும் செம்மணி மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள்
Local
29 April 2026
தமிழக சட்டசபைத் தேர்தல்- தி.மு.க கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Local
29 April 2026
திறைசேரி செயலாளர் நாளை நிதி பற்றிய குழுவிற்கு வர மாட்டார் !
Local
29 April 2026
150 பில்லியன் டொலர் இழப்பீடு! OpenAI-ஐ மீண்டும் தொண்டு நிறுவனமாக மாற்ற ஈலோன் மஸ்க் முயற்சி!
Local
29 April 2026