8ஆவது மற்றும் 9ஆவது நாடாளுமன்ற அமர்வுகளின் நிதிப் பயன்பாடு குறித்த முழுமையான கணக்காய்வு அறிக்கைகளை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (29) காலை கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் சில பிரிவுகள் இதற்கு முன்னர் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், இம்முறை அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய விரிவான கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"மக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு.
நிதிப் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே எமது நோக்கம்" என அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன மூலம் இந்தத் கணக்காய்வு முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் 10ஆவது நாடாளுமன்றத்திலும் இந்த நடைமுறை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
கணக்காய்வாளர் நாயகம் உறுதியளித்தபடி, அடுத்த மாத இறுதிக்குள் இந்த முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
Latest News
கட்சிப் பொறுப்புகளை துறந்தார் எரான்!
Local
29 April 2026
மராட்டியத்தில் தகிக்கும் வெயில்: வெப்பத்தாக்கத்திற்கு 109 பேர் உயிரிழப்பு - 3 இலட்சம் பேர் சிகிச்சை!
Local
29 April 2026
நாடாளுமன்றத்தின் முழுமையான கணகாய்வு அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிப்பு!
Local
29 April 2026
நாடாளுமன்றக் குழுவைப் புறக்கணிக்கும் திறைசேரி செயலாளர் – ஹர்ஷ டி சில்வா கடும் சாடல்
Local
29 April 2026
பிரபல இசையமைப்பாளர் மீது அத்துமீறல் குற்றச்சாட்டு: பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் பகிரங்க முறைப்பாடு
Local
29 April 2026
லண்டனில் இரு யூதர்கள் மீது கத்திக்குத்து: பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தீவிர விசாரணை
Local
29 April 2026
தொடரும் செம்மணி மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள்
Local
29 April 2026
தமிழக சட்டசபைத் தேர்தல்- தி.மு.க கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Local
29 April 2026
திறைசேரி செயலாளர் நாளை நிதி பற்றிய குழுவிற்கு வர மாட்டார் !
Local
29 April 2026
150 பில்லியன் டொலர் இழப்பீடு! OpenAI-ஐ மீண்டும் தொண்டு நிறுவனமாக மாற்ற ஈலோன் மஸ்க் முயற்சி!
Local
29 April 2026