General06 May 2026

மேற்கு ஆசியப் பதற்றம் - இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அண்மைய மோதல்கள் மற்றும் முக்கியமான எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் பிராந்திய ஸ்திரத்தன்மையையும் அமைதிக்கான முயற்சிகளையும் பாதிப்பதாக உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் இலங்கை நாட்டவர்கள் உட்பட பெருமளவிலான வெளிநாட்டுப் பணியாளர்கள் வசித்து வருவதால், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு இலங்கைக்கு மிக முக்கியமானதாகும்.

பொதுமக்கள், முக்கியமான குடிமக்கள் உள்கட்டமைப்புகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது.

அனைத்துத் தரப்பினரும் அதிகபட்ச பொறுமையைக் கடைப்பிடிக்குமாறும், பதற்றத்தைத் தணிப்பதற்கு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறும் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கும், சர்வதேச வர்த்தகத்திற்கு உகந்த சூழலை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும்.


Related recommendation
Hiru TV News | Programmes