General07 May 2026

வியட்நாம் ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை

வியட்நாம் ஜனாதிபதியும் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவருடன் 209 பேரைக் கொண்ட தூதுக்குழுவினர் இந்த வானூர்தி மூலம் வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தியாவின் மும்பை நகரிலிருந்து வியட்நாம் ஏர்லைன்ஸிற்கு (Vietnam Airlines) சொந்தமான VN-1 எனும் வானூர்தி மூலம் இவர்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes