General10 June 2026

ஹஜ் யாத்திரையில் அடிப்படை வசதிகள் இல்லை – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குற்றச்சாட்டு

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு சென்ற முஸ்லிம்கள் அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எம்.பி. ஹிஸ்புல்லாஹ், ஹஜ் கடமை என்பது சுற்றுலா அல்ல என்றும் அது முஸ்லிம்களின் வாழ்நாள் ஆன்மீக கடமை என்றும் குறிப்பிட்டார்.

ஹஜ் நாட்கள் இறை வழிபாட்டிலும் ஆன்மீக கடமைகளிலும் ஈடுபட வேண்டிய நாட்கள் என சுட்டிக்காட்டிய அவர், இம்முறை யாத்திரை சென்றவர்கள் அடிப்படை வசதிகள் கூட இன்றி பாரிய சிக்கல்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார்.

“நிர்வாக குறைபாடுகளால் முஸ்லிம்கள் பல சிக்கல்களை சந்தித்துள்ளனர். பாரிய கட்டணங்கள் அறவிடப்பட்டும் வசதிகள் உரிய முறையில் அமையவில்லை. யாத்திரிகர்களின் பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.”

ஹாஜிகள் அல்லாஹ்வின் விருந்தாளர்கள் என்பதால் அவர்களுக்கான ஏற்பாடுகள் வெளிப்படையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்த குறைபாடுகள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes