General11 June 2026

ஈரானிலுள்ள பல இலக்குகள் மீது அமெரிக்கா கூடுதல் தற்காப்புத் தாக்குதல்: மத்திய கட்டளையகம் அறிவிப்பு

ஈரானில் அமைந்துள்ள பல இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் "கூடுதல் தற்காப்புத் தாக்குதல்களை" நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரிலேயே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக மத்திய கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.

ஈரானின் நியாயமற்ற மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக மத்திய கட்டளையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஈரானின் முக்கிய துறைமுக நகரான பண்டார் அப்பாஸில் (Bandar Abbas) வெடிப்புச் சத்தம் கேட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

அதேநேரம், ஈரானின் கெஷ்ம் (Qeshm) மற்றும் ஹெங்காம் (Hengam) ஆகிய பகுதிகளில் கேட்கப்பட்ட வெடிப்புச் சத்தங்கள் "இராணுவ ஏவுகணைகளால்" ஏற்பட்டவை என ஈரானின் IRNA செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes