General11 June 2026

பூமிப்பந்தையே உலுக்கப் போகும் எல் நினோ!

பசுபிக் சமுத்திரத்தின் வெப்பமண்டலப் பகுதியில் தற்போது 'எல் நினோ' (El Niño) காலநிலை நிலைமைகள் ஏற்பட்டுள்ளன என்றும், இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அமெரிக்காவின் தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்தத் திடீர் வெப்பநிலை அதிகரிப்பானது ஒட்டுமொத்த உலகளாவிய வானிலை அமைப்பிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பசுபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த விசித்திர வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் கடுமையான வறட்சி போன்ற அசாதாரணக் காலநிலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes