General16 June 2026

நீர் விநியோகத்தடை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

உடவளவை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் நாளை (17) 13 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

உடவளவை நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்தத் தற்காலிக நீர்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உடவளவை நகரம் மற்றும் RET நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முற்பகல் 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்படும்.

இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தேவையான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளவும், நீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes