International16 June 2026

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 6.3 மெக்னிடியூட் அளவில் அதிர்வு!

சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் இன்று 6.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சீன நிலநடுக்க நெட்வொர்க் மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் தரைமட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று மாலை 5.06 மணியளவில் (பெய்ஜிங் நேரம்) ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 5 மெக்னிடியூட் அளவிலான பல தொடர் அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை உயிரிழப்புகள் அல்லது பாரிய சொத்து சேதங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில், பாதிப்பு நிலைமைகளை உள்ளூர் அதிகாரிகள் தீவிரமாக மதிப்பீடு செய்து வருகின்றனர்.

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு மற்றும் அவசரகால குழுக்கள் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes