இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (22) நண்பகலுக்குப் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (20) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்து 384,000 ரூபாயாக பதிவாகியிருந்தது.
இந்நிலையில், இன்று நண்பகலுக்குப் பின்னர் மேலும் 2,000 ரூபாயால் விலை அதிகரித்ததன் காரணமாக, 24 கரட் தங்கம் ஒரு பவுண் தற்போது 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 355,100 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாகவும் அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 44,388 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, இன்று மட்டும் 24 கரட் தங்கத்தின் பவுண் விலையில் மொத்தமாக 4,000 ரூபாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
சர்வதேச தங்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உள்ளூர் சந்தை தேவையின் அதிகரிப்பே இந்த விலை அதிகரிப்புக்கான முக்கிய காரணங்களாக இருக்கலாம் என சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
Latest News
வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
22 June 2026
தொழிற்கட்சித் தலைவர் - பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதை உறுதி செய்தார் எண்டி பர்ன்ஹாம்
Local
22 June 2026
பினோய் கைது செய்யப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு; அரசியல் பழிவாங்கலா என சந்தேகம்
Local
22 June 2026
அமோனியா வாயு கசிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Local
22 June 2026
இலங்கையில் தங்க விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக அதிகரிப்பு!
Local
22 June 2026
இலங்கையின் பல்லுயிர்த்தன்மைக்கு காலநிலை மாற்றத்தால் சவால்கள்
Local
22 June 2026
மெட்ரோ பேருந்து சேவைக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு
Local
22 June 2026
பிரித்தானிய பிரதமர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் பதவிகளிலிருந்து கெய்ர் ஸ்டார்மர் விலகல்
Local
22 June 2026
கொழும்பு - கண்டி வீதியில் 6 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
Local
22 June 2026
கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று: பல கடற்பரப்புகளுக்கு ‘அம்பர்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது!
Local
22 June 2026