அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது தொடர்பாக, முறைகேடுகளைத் தவிர்த்து வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய விசேட சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள இந்த விசேட யோசனைக்கே அமைச்சரவை தனது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளது.
அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்தல் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் சுற்றுநிருபங்களும் ஆலோசனைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நடைமுறையின் பிரதான நோக்கங்கள் பின்வருமாறு:
நாட்டின் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்விக்கான சமமான அணுகல் வாய்ப்புகளை உறுதிப்படுத்துதல்.
மாணவர் சேர்க்கையின் போது முழுமையான வெளிப்படைத்தன்மையைப் பேணுதல்.
சேர்க்கை செயல்முறைகளின் போது இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் அநீதிகளை முற்றாகக் குறைப்பதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளை வகுத்தல்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இம்முறை புதிய கல்வி மறுசீரமைப்பின் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பல முக்கிய நிறுவனங்களின் கருத்துக்களும் யோசனைகளும் கருத்தில் கொள்ளப்பட்டு இப்புதிய சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அவை வருமாறு,
கையூட்டல்; மற்றும் ஊழல்கள் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.
பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள்.
இந்த ஆலோசனைகள் மற்றும் புதிய விதிகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள புதிய சுற்றுநிருபமானது, வரும் 2027 ஆம் ஆண்டு தொடக்கம் அதன் பின்னர் தொடர்ந்து வரும் காலங்களில் அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
Latest News
முதலமைச்சர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் 'Unfollow' செய்த த்ரிஷா
Local
23 June 2026
சிரேஷ்ட அணி ஜெர்சியைப் பெற்றார் சூரியவன்ஷி - ரெய்னா, ஹர்பஜனின் எண் வழங்கப்பட்டது!
Local
23 June 2026
நண்பகலுக்குப் பின்னர் மீண்டும் சரிந்த தங்க விலை!
Local
23 June 2026
தொலைக்காட்சிகளிலும் இன்ஸ்டாகிராம் செயலி: மெட்டா நிறுவனத்தின் புதிய வசதி!
Local
23 June 2026
ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: பிரான்சில் நீர்நிலைகளில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு
Local
23 June 2026
தேசிய மீலாத் விழா அழைப்பிதழ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை கேள்வி – குறைபாடுகளை நிவர்த்திக்க அரசாங்கம் உறுதி!
Local
23 June 2026
ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விசேட தேசிய திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!
Local
23 June 2026
பதுளை நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை
Local
23 June 2026
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்: விசேட குழு மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் தலைமையில் விசேட அலகு நியமனம்!
Local
23 June 2026
MV Hondius சொகுசு கப்பல் ஹன்டா வைரஸ் பாதிப்பிலிருந்து 18 அமெரிக்கர்கள் விடுவிப்பு!
Local
23 June 2026