General23 June 2026

பதுளை நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை

பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைப் பைகளை வழங்குவதற்காக அரச வங்கி ஒன்றினால் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (23) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பதுளை நீதவான் உதித் குணதிலக வழக்கினை மீண்டும் நவம்பர் 17 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, ஊவா மாகாணத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைப் பைகளை வழங்குவதற்காக அரச வங்கி ஒன்றினால் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes