உலகளாவிய காலநிலை மாற்றங்களின் திருப்புமுனையாகக் கருதப்படும் 'எல் நினோ' காலநிலை தாக்கங்களை எதிர்கொள்வதற்கும், அதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கும் விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காலநிலை மாற்றங்களால் இலங்கையில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே தணிக்கும் நோக்கில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள இந்த விசேட யோசனைக்கே அமைச்சரவை தனது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளது.
இலங்கை காலநிலை மாற்றங்களுக்கு மிகவும் கூருணர்வு மிக்க நாடாக விளங்குகின்றது. எல் நினோ நிலைமை காரணமாக எமது நாட்டில் பின்வரும் அனர்த்த இடர்கள் அதிகரிக்கும் என விஞ்ஞானபூர்வமான தீர்க்கதரிசனங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது:
மழைவீழ்ச்சியில் திடீர் மாற்றங்கள் ஏற்படுதல்.
அதிக வெப்பம் மற்றும் கடுமையான வறட்சி நிலவுதல்.
திடீர் வெள்ளப்பெருக்கு அனர்த்தங்கள் ஏற்படுதல்.
இந்த அனர்த்தங்கள் நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இவ்வாண்டின் இறுதிப் பகுதி முதல் ஏற்படக்கூடிய எல் நினோ தாக்கங்களுக்கு முகங்கொடுக்க அரசாங்கம் இந்தத் துரித நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் மூலம் அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சமுதாயமட்ட அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பலப்படுத்தப்பட்டு, தேசிய மட்ட செயற்பாட்டுத் திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
எல் நினோ நிலைமையால் ஏற்படக்கூடிய நீர், மின்சாரம் மற்றும் உணவு நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்காக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்களைத் தயாரிப்பதற்கும், பொதுமக்களை விழிப்புணர்வூட்டுவதற்கும் பின்வரும் அமைச்சர்களை உள்ளடக்கிய உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது:
தம்மிக்க பட்டபந்தி அவர்கள் (சுற்றாடல் அமைச்சர்) – தலைவர்
கே.டீ.லால் காந்த (விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்)
சமந்த வித்யாரத்ன (பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்)
அநுர கருணாதிலக்க துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சர், மற்றும் வலுசக்தி அமைச்சர்)
வசந்த சமரசிங்க (வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்)
சுசந்த ரணசிங்க அவர்கள் (வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்)
மேற்குறிப்பிட்ட அமைச்சரவை உபகுழுவின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும், களநிலைமைகளைக் கையாள்வதற்கும் பின்வரும் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது:
ஜனாதிபதி பணிக்குழாம் தலைவர் – தலைவர்
செயலாளர், சுற்றாடல் அமைச்சு
செயலாளர், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
செயலாளர், பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு
செயலாளர், வலுசக்தி அமைச்சு
செயலாளர், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு
நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம்
பணிப்பாளர் நாயகம், வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்
பணிப்பாளர் நாயகம், வளிமண்டலவியல் திணைக்களம்
பணிப்பாளர் நாயகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம்
பணிப்பாளர் நாயகம், இலங்கை மகாவலி அதிகாரசபை
பொது முகாமையாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை
பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, எலக்ட்ரிசிட்டி ஜெனரேஷன் லங்கா (பிரைவேட்) லிமிடெட்
Latest News
முதலமைச்சர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் 'Unfollow' செய்த த்ரிஷா
Local
23 June 2026
சிரேஷ்ட அணி ஜெர்சியைப் பெற்றார் சூரியவன்ஷி - ரெய்னா, ஹர்பஜனின் எண் வழங்கப்பட்டது!
Local
23 June 2026
நண்பகலுக்குப் பின்னர் மீண்டும் சரிந்த தங்க விலை!
Local
23 June 2026
தொலைக்காட்சிகளிலும் இன்ஸ்டாகிராம் செயலி: மெட்டா நிறுவனத்தின் புதிய வசதி!
Local
23 June 2026
ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: பிரான்சில் நீர்நிலைகளில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு
Local
23 June 2026
தேசிய மீலாத் விழா அழைப்பிதழ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை கேள்வி – குறைபாடுகளை நிவர்த்திக்க அரசாங்கம் உறுதி!
Local
23 June 2026
ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விசேட தேசிய திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!
Local
23 June 2026
பதுளை நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை
Local
23 June 2026
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்: விசேட குழு மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் தலைமையில் விசேட அலகு நியமனம்!
Local
23 June 2026
MV Hondius சொகுசு கப்பல் ஹன்டா வைரஸ் பாதிப்பிலிருந்து 18 அமெரிக்கர்கள் விடுவிப்பு!
Local
23 June 2026