தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் திருத்தியமைக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை ( 06) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண திருத்தத்தின்படி, சாதாரண பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண பேருந்து சேவைகளில் 100 கிலோமீற்றர் வரையிலான பயணங்களுக்கான கட்டணம் 12 சதவீதத்தினாலும், 100 கிலோமீற்றரைத் தாண்டிய தூரப் பயணங்களுக்கான கட்டணம் 20 சதவீதத்தினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சொகுசு பேருந்து சேவைகளில் 100 கிலோமீற்றருக்கு உட்பட்ட பயணங்களுக்கான கட்டணம் 12 சதவீதத்தினாலும், 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரப் பயணங்களுக்கான கட்டணம் 15 சதவீதத்தினாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
இயக்கச் செலவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப, பயணிகள் போக்குவரத்து கட்டணங்களை திருத்தியமைப்பது குறித்து எட்டப்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Latest News
இலக்கை மீறிய சுங்க வருமானம் - அரசுக்கு கூடுதல் வருவாய்
Local
03 July 2026
12 வயதுக்குட்பட்ட மகளிருக்கான அஞ்சலோட்ட போட்டியில் பம்பலப்பிட்டி புனித குடும்பக் கன்னியர் மடம் முதலிடம்
Local
03 July 2026
பேருந்து கட்டணம் அதிகரிப்பு - புதிய கட்டணப் பட்டியல் வெளியீடு
Local
03 July 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் - ஆளுநரின் தீர்மானத்திற்கு ஜூலை 15 வரை இடைக்காலத் தடை
Local
03 July 2026
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 100x4 மீற்றர் அஞ்சலோட்ட போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வெற்றி
Local
03 July 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு: பூஜித் ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன ஆகியோரின் கோரிக்கைகள் நிராகரிப்பு
Local
03 July 2026
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் வென்னப்புவ ஜோசப் வாஸ் வித்தியாலயம் முதலிடம்
Local
03 July 2026
18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான அஞ்சலோட்ட போட்டியில் ஜயத் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வெற்றி
Local
03 July 2026
ஜூலை 6 முதல் புதிய பேருந்து கட்டண திருத்தம் அமுல் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு
Local
03 July 2026
டொலர் விலையில் மீண்டும் சரிவு - இன்று வெளியான புதிய விலை
Local
03 July 2026