கடந்த வருடம் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, மொத்தம் 202,025 விவசாயிகளுக்கு 12,341.5 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அந்தச் சபை அறிவித்துள்ளது.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக, முற்றாகப் பாதிக்கப்பட்ட 148,000 ஏக்கர் நெல் வயல்களுக்காக, 116,278 விவசாயிகளுக்கு 8,888.5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
விவசாய திணைக்களத்தின் ஊடாக மகாவலி வலயங்கள், மாகாணங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான பகுதிகளில் மக்காச்சோளம், மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்களைச் செய்கை பண்ணிய 85,747 விவசாயிகளுக்கு 3,453 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர்ச் செய்கைக்காக ஒரு ஹெக்டேயருக்கு 150,000 ரூபாயும், மக்காச்சோளம், மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்களின் ஒரு ஹெக்டேயருக்கு 200,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Latest News
ஜெலன்ஸ்கியின் புதிய பாதுகாப்பு வியூகம்: பாதுகாப்பு கூட்டணியை விரிவுபடுத்தும் யுக்ரைன்
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு வெலிக்கடையில் கண்ணீர் அஞ்சலி!
Local
08 July 2026
'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு
Local
08 July 2026
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம்: கண்ணீருடன் விடைபெற்ற மக்கள்
Local
08 July 2026
இலங்கையில் மேலும் வீழ்ச்சியடைந்த தங்க விலை!
Local
08 July 2026
மானியம் மட்டும் போதாது: குடும்பங்களை உற்பத்திப் பொருளாதாரத்தில் இணைக்க ஜனாதிபதி வலியுறுத்தல்
Local
08 July 2026
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது
Local
08 July 2026
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை - அரசாங்கம் பரிசீலனை
Local
08 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கறுப்புப் பட்டி அணிந்து கண்டனம்
Local
08 July 2026