நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகருக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கடிதத்தில்,
நாடாளுமன்றத்தில் எனக்கு இடதுபுறம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பொதுவெளியிலும் தன்னைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதோடு, வன்முறை அச்சுறுத்தல்களையும் விடுத்து வருகிறார். இத்தகைய இழிவான சொற்களின் பயன்பாடு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
இந்தச் சூழல் எனது கவனத்தைச் சிதறடிப்பதால், அவரை நாடாளுமன்ற அவையில் எனக்கு அருகில் அமர வைப்பது இயலாத காரியமாகிவிட்டது
அத்துடன், சுயேச்சைக் குழு ஒன்றின் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர் ஆவார். வழக்கமாக இத்தகைய உறுப்பினர்களுக்கான இருக்கைகள், மூத்த தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டதன் பின்னரே வழங்கப்படுவது வழக்கம்.
இருப்பினும், இந்த வழக்கமான நடைமுறைக்கு மாறாக, அவர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையில் அமர அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, இந்த விடயத்தில் தாங்கள் தலையிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்களுக்குப் பின்னர் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களை அமர வைக்கும் நாடாளுமன்ற மரபுக்கு இணங்க, குறித்த உறுப்பினரின் இருக்கையை எனக்கு அருகில் இல்லாதவாறு மாற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்," என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகருக்கு கஜேந்திரகுமார் கடிதம்
Local
09 July 2026
ஓய்வூதியதாரர்களுக்கான விசேட இணையவழி விழிப்புணர்வு தொடர் இன்று ஆரம்பம்
Local
09 July 2026
15 நோயாளிகளின் மரணங்களுக்கு காரணமான மருத்துவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!
Local
09 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: பெண் கைதிகள் இடமாற்றம்
Local
09 July 2026
டெங்கு பரவல் தீவிரம் - கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இணையவழியில்
Local
09 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் வீழ்ச்சி!
Local
09 July 2026
இன்று 3 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
Local
09 July 2026
அமெரிக்கா–ஈரான் பதற்றம் தீவிரம்: உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
Local
09 July 2026
ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க விசேட இணையவழி செயலமர்வு
Local
09 July 2026
பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் சிறைச்சாலையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு
Local
09 July 2026