International10 July 2026

சாதாரண பிஸ்கட் இனி தமிழ் பிஸ்கட் - பிஸ்கட்டில் அச்சிடப்பட்ட திருக்குறள் !

உலகப் புகழ்பெற்ற பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா (Britannia), தமிழர்களின் அடையாளமான திருக்குறளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்து, அதனை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உன்னத நோக்கத்துடன் தனது 'மில்க் பிகிஸ்' (Milk Bikis) பிஸ்கட்களில் திருக்குறள் வார்த்தைகளை அச்சடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்..." போன்ற உலகப்பொதுமறையின் உன்னத வரிகளை பிஸ்கட்களின் மேல் வடிவமைப்பதற்காக, தொழில்நுட்ப ரீதியாகப் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்ததாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பல மாத காலத் தீவிர உழைப்பிற்குப் பின்னரே இந்த அரிய முயற்சியைச் சாத்தியப்படுத்தியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்துள்ள பிரிட்டானியா நிறுவனம், இதனுடன் சேர்த்து 'திருக்குறள் சேலஞ்ச்' என்ற விசேட போட்டியையும் அறிமுகப்படுத்தியுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவரால் எழுதப்பட்ட 133 அதிகாரங்களைக் கொண்ட 1330 குறள்கள் அன்றாட வாழ்விற்கான மிகவும் போற்றப்படும் வழிகாட்டிகளில் ஒன்றாகத் திகழ்கின்றன.


Related recommendation
Hiru TV News | Programmes