General13 July 2026

120 ரூபாய்க்கு ஒரு கிலோ நெல்லை விற்பனை செய்ய முடியவில்லை - கடந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க அலையை உருவாக்கியவர்களே விவசாயிகள்!

தற்போது 120 ரூபாய்க்கு ஒரு கிலோ நெல்லை விற்பனை செய்ய முடியவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"விவசாயிகளே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முதன்முதலில் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்தார்கள். அது கடந்த அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஒரு அலையாக மாறியது என்பதை இந்த நாட்டில் உள்ள அனைவரும் அறிவார்கள்."
Related recommendation
Hiru TV News | Programmes