விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை, காளான் செய்கையாளர்களுக்காகப் புதிய காப்பீட்டுத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளது.
காளான் செய்கையை ஊக்குவிப்பதையும், எதிர்பாராத பயிர்ச் சேதங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்குப் பாதுகாப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, 250 வளர்ப்புப் பைகளை கொண்ட ஒரு காளான் வளர்ப்பு அறையை, மூன்று மாத காலப்பகுதிக்கு சுமார் 2,025 ரூபாய் பிரீமியத்தைச் செலுத்தி காப்பீடு செய்ய முடியும்.
நோய்த்தாக்கங்கள் அல்லது பூச்சிகளின் தாக்கங்களால் காளான் செய்கைக்குச் சேதம் ஏற்பட்டால், ஒரு தொகுதிக்கு 22,500 ரூபாய் வரை நட்டஈடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு அமையக் காளான் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மாத்திரமே இந்தக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்கள்.
காளான் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபையினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
Latest News
வாழ்க்கைத்துணையைத் தேடும் இளைஞர்களுக்கான “டேட்டிங் ரிட்ரீட்” முகாம்
Local
15 July 2026
'ஜனநாயகன்' திரைப்படம் மீண்டும் தணிக்கை : வெளியீட்டு திகதி குறித்த முக்கிய அறிவிப்பு!
Local
15 July 2026
பலத்த காற்று வீசும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
15 July 2026
மிக்ஸர் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு
Local
15 July 2026
இலங்கையில் நேற்று அதிகரித்த தங்கத்தின் விலை இன்று சீராக உள்ளதா? : இன்றைய சந்தை நிலவரம்!
Local
15 July 2026
'சூப்பர் எல் நினோ' உருவாக வாய்ப்பு: உலகளாவிய வானிலை மாற்றத்திற்கு எச்சரிக்கை
Local
15 July 2026
இந்தியாவின் மதிப்புமிக்க முதல் 10 வர்த்தக நாமங்களில் இடம்பிடித்த அதானி குழுமம்
Local
15 July 2026
காளான் விவசாயிகளுக்குக் காப்பீட்டுத் திட்டம்: விவசாய அமைச்சு புதிய முன்னெடுப்பு
Local
15 July 2026
பொலித்தீன் பைகள் மீதான கட்டணத்தை முறையாக நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை
Local
15 July 2026
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜயலத் திஸாநாயக்க கைது
Local
15 July 2026