International17 July 2026

அரசியலுக்குள் கலந்துவிட்ட பிரேசிலின் கால்பந்து ஜேர்சி

பிரேசில் நாட்டின் மஞ்சள் மற்றும் பச்சை நிற ஜெர்சி, அந்த நாட்டு மக்களின் தேசப்பற்று மற்றும் கால்பந்து ஜாம்பவான்களான பெலே, நெய்மர் ஆகியோரின் அடையாளமாக உலகளவில் பார்க்கப்படுகிறது.

ஆனால், பிரேசிலுக்குள் இந்த ஜெர்சி தீவிர அரசியல் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, தனது பிரசாரங்களின் போது இந்த மஞ்சள் ஜெர்சியைத் தனது ஆதரவாளர்களின் அடையாளமாக மாற்றினார்.

தற்போது, 2026 கால்பந்து செம்பியன்சிப் போட்டியின் போது, அவரது மூத்த மகன் ஃபிளவியோ போல்சனாரோ இந்த ஜெர்சியை "போல்சனாரோவின் ஜெர்சி" என்று வெளிப்படையாக அறிவித்து அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தேசியக் கொடியின் நீட்சியாகப் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு ஆடையை, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி தங்களுக்குச் சொந்தமாக்குவது தவறானது என்று இடதுசாரித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரேசிலில் போக்குவரத்து கட்டண உயர்வுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்களின் போதும், போராட்டக்காரர்கள் இந்த மஞ்சள் ஜெர்சியை அணிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes