International23 July 2026

'ஜனநாயகன்' படம் பார்க்க வந்த இடத்தில் கதறி அழுத தவெக நிர்வாகி : திரையரங்கில் நெகிழ்ச்சியான தருணம்!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை, கரூர் பகுதியில் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்களுடன் இணைந்து பார்த்த கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், திரைப்படத்தின் தொடக்கத்தில் டைட்டில் கார்ட் திரையிடப்பட்டபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்துள்ளார்.

'ஜனநாயகன்' நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற உணர்வின் காரணமாகவே அவர் தேம்பித் தேம்பி அழுததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் திரையரங்கில் இருந்த ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், அதன் காணொளிகள் மற்றும் நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes