General10 August 2026

அதிக விலைக்கு உந்துருளிகளை விற்ற 3 வியாபாரத்தளங்களுக்கு அபராதம்

நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய சோதனைகளின் போது,ஹெட்டிப்பொலவில் உள்ள மூன்று உந்துருளி விற்பனையாளர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ விற்பனையாளர் விலையை விட அதிக விலைக்கு உந்துருளிகளை விற்பனை செய்தமை , விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமைக்காக, ஹெட்டிப்பொல நீதவான் நீதிமன்றம், இந்த அபராதத்தை விதித்துள்ளது.

அதிகாரப்பூர்வ விற்பனையாளர் விலையான 790,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு உந்துருளி, 10,00000-க்கு விற்கப்பட்டுள்ளது.

அத்துடன், விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறிய இரண்டு குற்றச்சாட்டுக்களுக்குக்காக,அந்த நிறுவனத்துக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes