கற்பிட்டி, குரக்கன் ஹேன பகுதியில் உள்ள ஏரியில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில், அதில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 7 வயது சிறுவனும் 13 வயது சிறுமியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடும்பத்தினர் நேற்று (11) பிற்பகல் கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படும் வலைகளை எடுத்துவருவதற்காக வள்ளத்தில் பயணித்துள்ளனர்.
இதன்போது வள்ளம் கவிழ்ந்ததில், தாய், தந்தை மற்றும் இரு பிள்ளைகளும் நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவர்கள் கற்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிள்ளைகள் இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த பிள்ளைகளின் தாய் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், தந்தை மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
‘தர்மன்’ திரைப்படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தீவிரம்
Local
12 August 2026
அருண்ராஜா காமராஜ் படத்தைக் கைவிட்ட விஷ்ணு விஷால் – கருத்து வேறுபாட்டால் முறிந்த கூட்டணி
Local
12 August 2026
சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' - முன்பதிவில் புதிய சாதனை!
Local
12 August 2026
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் திடீர் மாற்றம் : அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
Local
12 August 2026
அரசாங்கம் சர்வாதிகாரத்தை உருவாக்க முயல்கிறது - சஜித் சாடல்
Local
12 August 2026
காணாமல் போன பெண்ணை மீட்பதற்காக நில்வள கங்கையில் தீவிர தேடுதல் நடவடிக்கை
Local
12 August 2026
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிக்கும் விவகாரம் - ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த இறுதிக் கோரிக்கை
Local
12 August 2026
இன்ஸ்டாகிராமில் அதிக விருப்பங்களை குவித்த தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் – தனுஷ் முதலிடம்!
Local
12 August 2026
இலங்கையில் அதிகரிக்கும் யானைகளின் மரணங்கள்: சுற்றாடல் அமைச்சு எச்சரிக்கை!
Local
12 August 2026
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிக்க வேண்டாம் - மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
Local
12 August 2026