இலங்கையின் அரச மருத்துவமனைகளில் 25,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருதய அறுவை சிகிச்சைகள், முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்காக காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், சில இருதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்பு காலம் 2029ஆம் ஆண்டு வரை நீடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சுகாதாரத் துறையில் அதிகரித்து வரும் காத்திருப்புப் பட்டியல் நெரிசலைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அரச மருத்துவமனைகளில் நிலவும் காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகாலமாக சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளில், தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவில் சிகிச்சை பெற முடியாத குறைந்த வருமானம் கொண்டவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குத் தீர்வாக, ஜனாதிபதி நிதியத்தின் ஒதுக்கீடுகளை அதிகரித்து, அரச மருத்துவமனைகளில் காத்திருக்கும் நோயாளிகள் குறிப்பிட்ட கட்டண அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தலாம் என அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
அதேவேளை, அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேலதிக சேவைக்கான உரிய கொடுப்பனவுகளை வழங்கி, தினசரி மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலத் தீர்வாக, சிறப்பு மருத்துவப் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மருத்துவமனை வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தேவையான உபகரணங்களின் போதுமான இருப்பை உறுதி செய்தல் அவசியம் என்றும் நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.
Latest News
தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை விளக்கமறியலில்!
Local
21 August 2026
காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ச முன்னிலை
Local
21 August 2026
நந்தா மாலினி மறைவையொட்டி நாடாளுமன்றத்தில் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி
Local
21 August 2026
நந்தா மாலினி மறைவையொட்டி அரச நிறுவனங்களில் 3 நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
Local
21 August 2026
சர்வதேச சந்தையில் அதிகரிப்பை பதிவு செய்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை
Local
21 August 2026
காவல்துறை தடையகற்றல் கணினி கட்டமைப்பில் திடீர் கோளாறு - மறுஅறிவித்தல் வரை விண்ணப்பிக்க வேண்டாம்
Local
21 August 2026
வடக்கு, கிழக்கில் காணிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி அறிவுறுத்தல்
Local
21 August 2026
இந்தியாவில் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை வருமா? நீதிமன்றில் அதிரடி உத்தரவு!
Local
21 August 2026
நடிகர் விக்ரமால் பண்ணைக்கு வந்த சோதனை: பாய்ந்த அதிகாரிகள்!
Local
21 August 2026
விஜய் ஆட்சியின் சிங்கப்பெண்களுக்கு இதோ முக்கிய அறிவிப்பு!
Local
21 August 2026