நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவசர நிலைமைகளுக்கு விரைவாகப் பதிலளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
களுத்துறை சிறைச்சாலையில் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சிறைச்சாலை நெருக்கடிகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதுடன், கைதிகளின் நலன்புரி மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.
பிரதேச அரச அதிகாரிகளின் தலைமையில் அமைக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த குழுக்கள், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை கூடி நிலவரங்களை ஆராயவுள்ளன.
காவல்துறை, இராணுவம், காவல்துறை விசேட அதிரடிப்படை, நீர் வழங்கல் சபை, மின்சார சபை, சுகாதாரத் துறை மற்றும் தீயணைப்புப் பிரிவு உள்ளிட்ட பல துறை சார்ந்த நிறுவனங்கள் இந்தப் பொறிமுறையில் இணைக்கப்படவுள்ளன.
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டமும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக களுத்துறை, காலி, பூஸ்ஸ மற்றும் மாத்தறை ஆகிய சிறைச்சாலைகளை மையப்படுத்தி ஒருங்கிணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கைதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்களது புகார்களைத் தெரிவிப்பதற்குப் புதிய பயனுள்ள முறைமையொன்று உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Latest News
இந்தியாவில் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை வருமா? நீதிமன்றில் அதிரடி உத்தரவு!
Local
21 August 2026
நடிகர் விக்ரமால் பண்ணைக்கு வந்த சோதனை: பாய்ந்த அதிகாரிகள்!
Local
21 August 2026
விஜய் ஆட்சியின் சிங்கப்பெண்களுக்கு இதோ முக்கிய அறிவிப்பு!
Local
21 August 2026
விஜய்யை முந்திய ரஜினி : தளபதியின் மதிப்பை விட உயர்ந்த சூப்பர் ஸ்டாரின் மதிப்பு!
Local
21 August 2026
ஆந்திராவில் அதிர்ச்சி: ஆசிரியர் மடியிலேயே வீழ்ந்து மரணமான மாணவன்
Local
21 August 2026
விஜய்- திரிஷா விடயம்: நடிகை சஞ்சனா கல்ராணியின் அதிரடி கருத்து!
Local
21 August 2026
மொனராகலையில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு : 3 பேர் காயம் !
Local
21 August 2026
தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி, ஏன் விஜய் வாகன வசதி குறித்த அறிவிப்பை விடுத்தார்!
Local
21 August 2026
தொலைக்காட்சி விவாதத்திலும் மோதிக்கொண்ட விஜய் - உதய் கட்சியினர்!
Local
21 August 2026
அமெரிக்காவும் கனடாவும் வர்த்தக ஒப்பந்தத்துக்கு தயாராகின்றன.
Local
21 August 2026