Entertainment13 July 2026

தெலுங்கு சினிமாவை விட்டு வெளியேறுகிறாரா ஜான்வி கபூர்?

தென்னிந்திய மற்றும் பொலிவுட் திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் நடிகை ஜான்வி கபூர், தனது அடுத்தகட்ட திரைப்பயணம் குறித்து மிக முக்கியமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராம் சரணுக்கு ஜோடியாக நடித்த 'பெத்தி' படத்திற்குப் பிறகு, அவர் தெலுங்கு அல்லது பொலிவுட் திரையுலகில் பெரிய அளவிலான புதிய படங்களில் இதுவரை ஒப்பந்தமாகவில்லை.

'பெத்தி' திரைப்படம் தன்னை அகில இந்திய அளவில் ஒரு முன்னணி நடிகையாக நிலைநிறுத்தும் என்று ஜான்வி மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்.

இந்தப்படம் வணிக ரீதியாக நல்ல வசூலைப் பெற்றாலும், ஜான்வியின் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு ரசிகர்களிடையே விமர்சனங்களுக்கு உள்ளானது.

படத்தின் மீதான ஏமாற்றத்தினால், வெளியீட்டிற்குப் பின் அந்தப் படத்தை அவர் விளம்பரப்படுத்துவதைத் தவிர்த்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின.

இதன் விளைவாக, இனிவரும் காலங்களில் தெலுங்கு படங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜான்வி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வலுவான கதாபாத்திரங்கள் அமையாத பட்சத்தில், அவர் தெலுங்கு படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொள்ளக்கூடும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அல்லு அர்ஜுனின் அடுத்த படமான 'ராக்கா'வில் ஜான்வி நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், தயாரிப்பு நிறுவனம் அல்லது நடிகை தரப்பிலிருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.

தெலுங்கு படங்களை தாண்டி, பொலிவுட்டின் முன்னணி நடிகைகளின் வரிசையில் தனது இடத்தைத் தக்கவைக்க ஜான்வி போராடி வருகிறார். ரன்வீர் சிங் போன்ற பொலிவுட் நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடிப்பதற்காக அவர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes