தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, உடல்நல பாதிப்புகள் காரணமாகக் கலைத்துறையிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் திரைப்படங்கள் மற்றும் இணையத்தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகையாக மட்டுமின்றி, திரைப்படத் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள அவர், சமீபத்தில் தயாரித்த தெலுங்குத் திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றி குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ள உணர்ச்சிகரமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு இருந்த தனது மனநிலை குறித்துப் பதிவிட்டுள்ள சமந்தா, "படம் வெளியாவதற்கு முன்பு, மக்கள் இதைப் பற்றிப் பேசுகிறார்களா? நாங்கள் வெளியிடும் விளம்பரங்கள் மற்றும் முன்னோட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா? இப்படியொரு படம் வருவது அவர்களுக்குத் தெரியுமா? என்று பல கேள்விகள் எனக்குள் இருந்தன.
அந்த சமயத்தில் என் நண்பர் ஒருவர், 'பி' சென்டர் திரையரங்கு உரிமையாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு, இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்துக் கேட்டார். அதற்கு அந்த உரிமையாளர், ‘ஒரு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தை யாராவது பார்ப்பார்களா? பெரிய நடிகருடன் நடித்தால் கவர்ச்சிக்காக மக்கள் பார்ப்பார்கள்.
ஆனால், நாயகியே முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் படத்தை யாரும் வரமாட்டார்கள்’ என்று சற்றும் யோசிக்காமல் பதில் அளித்தார். அந்த காலகட்டத்தில் பெண் மையத் திரைப்படங்கள் குறித்து நிலவிய பொதுவான பிம்பம் இதுவாகத்தான் இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், யாரோ ஒருவர் ரிஸ்க் எடுக்கும்போதுதான் மாற்றம் நிகழும். தற்போது அந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இனி பெண் மையத் திரைப்படங்களைப் பற்றித் திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டால், அவர்களின் பதில் 'யாரும் வரமாட்டார்கள்' என்பதற்குப் பதிலாக, 'பொறுத்திருந்து பார்ப்போம்' என்று மாறக்கூடும் என நம்புகிறேன்" என சமந்தா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பெண் மையத் திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெற முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், திரையுலகில் ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சமந்தாவின் இந்த நேர்மையான பகிர்வுக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Latest News
பிரம்மாண்ட வாணவேடிக்கையால் ஜொலித்த பரிஸ் நகரம் : ஆளில்லா வானூர்திகள் உருவாக்கிய கண்கொள்ளாக் காட்சி!
Local
14 July 2026
இலங்கை உலகின் சிறந்த 50 உணவு சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகத் தெரிவு!
Local
14 July 2026
அரசாங்கத்தின் அலட்சியத்தால் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு: சம்பத் அதுகோரல குற்றச்சாட்டு
Local
14 July 2026
இலங்கை ப்ரீமியர் லீக்கில் களமிறங்கும் ஷாஹீன் ஷா அப்ரிடி
Local
14 July 2026
நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவரின் கூற்றுக்கு எதிராகக் கடும் விமர்சனம்
Local
14 July 2026
வடமேல் மாகாண தவணைப் பரீட்சை ஒத்திவைப்பு!
Local
14 July 2026
பெண்ணை மையப்படுத்திய படத்தை யார் பார்ப்பது ? - வெற்றியால் பதிலடி கொடுத்த சமந்தா
Local
14 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
14 July 2026
சிறுமியிடம் அத்துமீறியவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
Local
14 July 2026
மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி – ரூ.943 கோடி லொத்தர் பரிசு!
Local
14 July 2026