அமெரிக்க, ஹூஸ்டனில் நடைபெற்ற 2026 உலகக் கிண்ண குழு 'K' போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் போர்த்துக்கல் அணி 5-0 என்ற கோல் அடிப்படையில் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
இந்தநிலையில் இந்தப் போட்டியில் ரொனால்டோ வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
போட்டியின் 6-வது நிமிடத்தில் ஜாவோ கான்செலோவின் கிராஸ் மூலமாக முதல் கோலை அடித்த 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து வரலாற்றில் ஆறு வெவ்வேறு உலகக் கிண்ணத் தொடர்களில் (2006, 2010, 2014, 2018, 2022, 2026) கோல் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
அத்துடன், புரூனோ பெர்னாண்டஸ் கொடுத்த வாய்ப்பின் மூலம் ரொனால்டோ ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.
இதன்மூலம், உலகக் கிண்ணப்போட்டிகளில் போர்த்துக்கல்; அணிக்காக அதிக கோல் அடித்த ஜாம்பவான் யுசேபியோவின் (9 கோல்கள்) சாதனையை முறியடித்து, 10 கோல்களுடன் போர்துக்கல்லின் புதிய வரலாற்று நாயகனாக மாறினார்.
இந்தப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணி ஒரு கோல் அடித்த போதிலும், அதற்கு முன்பாக கான்செலோ மீது ஃபவுல் செய்யப்பட்டதால் VAR சோதனையின் மூலம் அந்த கோல் மறுக்கப்பட்டது.
ஆரம்ப போட்டிகளில் ஏமாற்றமளித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்தப் போட்டியில் தனது அசுரத்தனமான ஆட்டத்திற்கு மீண்டும் திரும்பினார்.
இன்றைய ஆட்டத்தின் முக்கிய நிகழ்வுகளாக 06வது நிமிடத்தில் ஜோவோ கான்செலோவின் துல்லியமான கிராஸ் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்தார்.
17வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ-கிக் வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்தி நுனோ மென்டிஸ் போர்த்துக்கலின்; இரண்டாவது கோலை அடித்தார்.
30வது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் அணியின் கானியேவ் அடித்த ஒரு அற்புதமான கோல், அதற்கு முந்திய பவுல் காரணமாக இரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து 39வது நிமிடத்தில் ரூனோ பெர்னாண்டஸ் கொடுத்த பாஸைப் பெற்று ரொனால்டோ தனது இரண்டாவது கோலை அடித்தார்.
இதனையடுத்து பெர்னாண்டஸ் எடுத்த கேர்னர் கிக், உஸ்பெகிஸ்தான் தற்காப்பு வீரர் குசானோவ் மற்றும் கோல்கீப்பர் நெமடோவ் ஆகியோரின் தவறால் சொந்த கோலாக மாறியது.
இந்தநிலையில் அடுத்து வந்த இறுதி ஆட்டப்பகுதியில் 2 கோல்களை போர்த்துக்கல் அணி பெற்று இறுதியில் 5-0 என்ற சிறப்பு வெற்றியை பதிவு செய்தது.
Latest News
திடீர் சோதனையில் சிக்கிய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்!
Local
24 June 2026
ரொனால்டோவின் சாதனையுடன் உஸ்பெகிஸ்தானை 5-0 என்ற அடிப்படையில் தோற்கடித்த போர்த்துக்கல்!
Local
24 June 2026
உலகக் கிண்ண கால் பந்தாட்டப் போட்டியில் ரொனால்டோ ஏற்படுத்திய வரலாற்று சாதனை
Local
23 June 2026
ஈரானின் பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது: ஈரான் ஜனாதிபதி அதிரடி
Local
23 June 2026
டெங்கு பரவல் தீவிரம் - 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அபாய வலயங்களாக அறிவிப்பு
Local
23 June 2026
சமரியின் அதிரடி சதத்தால் இலங்கை அணிக்கு வெற்றி!
Local
23 June 2026
அமெரிக்கா வழங்கிய 10 உலங்குவானூர்திகள் வான்படையிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பு
Local
23 June 2026
அமெரிக்காவிடமிருந்து 4 மில்லியன் டொலர் பெறுமதியான செய்மதித் தொடர்பு கட்டமைப்பு!
Local
23 June 2026
சித்துபாத்தியில் இதுவரை 409 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு; பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
Local
23 June 2026
இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்: ஓமான் மற்றும் ஈரான் கூட்டாக அறிவிப்பு
Local
23 June 2026