General27 June 2026

ஈராக்கை படுதோல்வியடைய செய்த செனகல்

கால்பந்து செம்பியன்ஷிப் தொடரின் 'குழு ஐ' பிரிவில், நேற்று நடைபெற்ற போட்டியில் செனகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியைத் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.

செனகல் அணியின் சார்பில் ஹபீப் டியாரா 4ஆவது நிமிடத்திலும், இஸ்மாயிலா சார் 56 வது நிமிடத்திலும், பாப் குயே 59 வது மற்றும் 71 நிமிடங்களிலும், இலிமன் என்டியாயே 82வது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர்.

இதில் பாப் குயே அடித்த இரண்டு கோல்களும் நீண்ட தூரத்திலிருந்து அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அணியை பொறுத்தவரையில் போட்டியின் 13-வது நிமிடத்தில், ஈராக் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் ரெபின் சுலக்கா, சாடியோ மானேயைத் தடுத்ததற்காக சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

இதனால் ஈராக் அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.

இதேவேளை ஈராக் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

இந்த வெற்றியின் மூலம் செனகல் அணி 32 அணிகள் சுற்றிற்குள் முன்னேறுவதற்கான தகுதியை உறுதிப்படுத்த காத்திருக்கிறது.
Related recommendation
Hiru TV News | Programmes