2026 கால்பந்து தொடரின் குழுச் சுற்றுடன் ஸ்கொட்லாந்து அணி வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் கிளார்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கானாவுக்கு எதிரான குரோஷியாவின் வெற்றியால், ஸ்கொட்லாந்து அணி தொடரிலிருந்து வெளியேறுவது உறுதியான நிலையில், கிளார்க் தனது முடிவை அறிவித்தார்.
2019-ஆம் ஆண்டு முதல் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய கிளார்க், ஸ்கொட்லாந்து அணியை நீண்ட காலத்திற்குப் பிறகு பெரிய தொடர்களுக்கு அழைத்துச் சென்ற பெருமைக்குரியவர்.
இது குறித்து கிளார்க் தனது உருக்கமான பிரியாவிடைச் செய்தியில், "வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது பெரும் கௌரவம். அவர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். எனக்குப் பின் வருபவருக்கு நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
இஸ்கொட்டிஷ் கால்பந்து சங்கத்தின் தலைமை நிர்வாகி இயன் மேக்ஸ்வெல் (Ian Maxwell) , கிளார்க்கின் ஏழு வருடக்கால சேவைக்கு நன்றி தெரிவித்ததுடன், அணியின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார்.
Latest News
சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தை மீறிய இலங்கை: சர்வதேச தலையீட்டை கூட்டாக வலியுறுத்தும் 9 அமைப்புக்கள்
Local
28 June 2026
செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு
Local
28 June 2026
வெப்ப அலையினால் பிரான்சில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Local
28 June 2026
கால்பந்து தொடரின் ஸ்கொட்லாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவி விலகினார்
Local
28 June 2026
நாட்டின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 21 சதவீதத்தால் அதிகரிப்பு
Local
28 June 2026
கால்பந்து கிண்ண தொடரின் 'சுப்பர் 32' சுற்றுக்கான போட்டிகள் அட்டவணை வெளியீடு
Local
28 June 2026
காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை
Local
28 June 2026
கொழும்பு பங்குச் சந்தையின் அதிரடி நடவடிக்கை : செயலற்ற கணக்குகளைப் பாதுகாக்கும் புதிய திட்டம் அறிமுகம்!
Local
28 June 2026
ஜனாதிபதி செயலகத்தில் தூய்மைப் பணி அவசியமெனில், நாட்டின் ஏனைய பகுதிகளின் நிலை என்ன? - நாமல் ராஜபக்ஷ கேள்வி
Local
28 June 2026
தேசிய அடையாள அட்டை இல்லாத முதியவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விசேட திட்டம் ஆரம்பம்
Local
28 June 2026