கால்பந்து தொடரின் 16 அணிகளுக்கான சுற்றில், பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இணை நடாத்துனரான அமெரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பெல்ஜியம் அணிக்கு சார்லஸ் டி கெட்டேலேரே (Charles De Ketelaere) 9 ஆவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார்.
தொடர்ந்து ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் அமெரிக்க அணியின் மாலிக் டில்மேன் (Malik Tillman) அபாரமாக ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.
எனினும், அடுத்த 116 விநாடிகளுக்குள் சார்லஸ் டி கெட்டேலேரே மீண்டும் ஒரு ஹெடர் கோல் அடித்து பெல்ஜியத்தின் முன்னிலையை 2-1 என உறுதி செய்தார்.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியிலும் பெல்ஜியத்தின் ஆதிக்கம் தொடர்ந்தது.
57 ஆவது நிமிடத்தில் அமெரிக்க இலக்குக் காப்பாளரின் தவறான நகர்வை சாதகமாக்கிக் கொண்ட ஹான்ஸ் வனகென் (Hans Vanaken) பெல்ஜியம் அணியின் மூன்றாவது கோலை பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் மாற்று வீரராக களம் புகுந்த நட்சத்திர வீரர் ரொமேலு லுகாகு (Romelu Lukaku) ஒரு அபாரமான கோலை அடித்து பெல்ஜியத்தின் வெற்றியை 4-1 என உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், பெல்ஜியம் அணி காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள தகுதி பெற்றுள்ளது.
Latest News
ஜெலன்ஸ்கியின் புதிய பாதுகாப்பு வியூகம்: பாதுகாப்பு கூட்டணியை விரிவுபடுத்தும் யுக்ரைன்
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு வெலிக்கடையில் கண்ணீர் அஞ்சலி!
Local
08 July 2026
'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 12,341 மில்லியன் ரூபா இழப்பீடு
Local
08 July 2026
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம்: கண்ணீருடன் விடைபெற்ற மக்கள்
Local
08 July 2026
இலங்கையில் மேலும் வீழ்ச்சியடைந்த தங்க விலை!
Local
08 July 2026
மானியம் மட்டும் போதாது: குடும்பங்களை உற்பத்திப் பொருளாதாரத்தில் இணைக்க ஜனாதிபதி வலியுறுத்தல்
Local
08 July 2026
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது
Local
08 July 2026
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை - அரசாங்கம் பரிசீலனை
Local
08 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கறுப்புப் பட்டி அணிந்து கண்டனம்
Local
08 July 2026