General04 December 2018

பயணித்து கொண்டிருந்த தொடரூந்தில் நடந்துள்ள பெரும் அதிர்ச்சி சம்பவம் - காணொளி

நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொடரூந்து இரட்டை சக்தி தொகுப்பு மற்றும் டீசல் இயந்திரம் குறித்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி பரவலாக பேசப்பட்டது.

எனினும் இவ்வாறு நாட்டுக்கு புதிய தொடரூந்து ஒன்று வரும் வேளை சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள மேலும் ஒரு காணொளி தற்போது பலரது அவதானத்திற்கு சென்றுள்ளது.

தொடரூந்து பயணித்து கொண்டிருந்த வேளை இரண்டு பயணிகள் பெட்டிகள் அகன்று சென்றுள்ள விதத்தை அதில் பயணித்த பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் நேரடியாக பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் யாழ் தேவி தொடரூந்தில் இடம்பெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த காணொளி கீழே..

Related recommendation
Hiru TV News | Programmes