General23 August 2025

ரணிலின் கைது ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரிய தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டமை ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரிய தாக்குதல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்த்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டார்.

குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் முன்கூட்டியே சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்திருந்த கருத்தை இன்றைய தினமும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது மிகவும் மோசமான நிலைமையாகும்.

அதனடிப்படையில் குறித்த கைது நடவடிக்கையின் பின்னணியில் பாரிய திட்டம் உள்ளமை தெரியவருகின்றது.

இது நீதிமன்றத்தையும் நாட்டின் சட்டத்தையும் அவமதிக்கும் செயற்பாடாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes