பிரான்சின் பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியக கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைதுகள் புதன்கிழமை இரவு பாரிஸ் பிராந்தியத்தில் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபர் ஒருவரும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த புதிய கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலகின் அதிக பார்வையாளர்களைக் கொண்ட அருங்காட்சியகமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.
பகல் நேரத்தில் நான்கு திருடர்கள் கட்டிடத்திற்குள் நுழைந்து, 88 மில்லியன் யூரோக்கள் (102 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
இருப்பினும், திருடப்பட்ட நகைகள் இன்னும் மீட்கப்படவில்லை என்று அரச சட்டத்தரணி பெக்குவோ வியாழக்கிழமை பிரெஞ்சு வானொலி அலைவரிசை ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளில் ஒரு முக்கியமான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் டி.என்.ஏ குற்ற நிகழ்விடத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என்றும் அரச சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.
பிரெஞ்சு விசாரணையாளர்கள் தற்போது மேலதிக விவரங்களை வழங்கவில்லை என்றாலும், புதிய சந்தேக நபர்களைக் குற்றச்சாட்டுகள் சுமத்த அல்லது விடுதலை செய்ய முன்னர் நான்கு நாட்கள் வரை தடுத்து வைத்து விசாரிக்க முடியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
Latest News
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி: மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை
Local
23 September 2026
ரூ. 40 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: தம்பதி மீது சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை
Local
23 September 2026
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தது
Local
23 September 2026
வியட்நாமில் இருந்து கொழும்புக்கு பயணித்த வானுார்தி இயந்திரத்தில் பிரச்சினை- சென்னையில் அவசரமாகத் தரையிறக்கம்
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு-குற்றவாளிகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்ட தண்டனை விபரங்கள்!
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- குற்றவாளிகள் 15 பேருக்கு 220 வருட கடூழிய சிறைத்தண்டனை
Local
23 September 2026
மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககேவுக்கு பிணை
Local
22 September 2026
மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கல்வி – நாடளாவிய ரீதியில் 4,570 ஸ்மார்ட் பலகைகள்!
Local
22 September 2026
3x3x3 ரூபிக்ஸ் கியூப்: 6 வயது சிறுமி 3 நாட்களில் இருமுறை உலக சாதனை!
Local
22 September 2026
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது! - நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச சாடல்
Local
22 September 2026