பிரதான சுற்றுலாத் தலங்களை அண்மித்த பகுதிகளில் சீருடை அணிந்த மற்றும் சிவில் உடையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவி காவல்துறை அத்தியட்சகருமான வூட்லர் , சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பல பகுதிகளில் சிவில் உடையில் உள்ள அதிகாரிகள் ஏற்கனவே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
அதேபோல், சுற்றுலா காவல்துறை பிரிவின் சீருடை அணிந்த அதிகாரிகளும் அந்தப் பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஒவ்வொரு சுற்றுலாத் தலத்திலும் உள்ள காவல்துறை சோதனைச் சாவடிகள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.
எனவே, சுற்றுலாப் பயணிகள் எந்த நேரத்திலும் முறைப்பாடுகளைச் செய்யவும், உதவிகளைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அண்மையில் வெளிநாட்டுப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இரண்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு-குற்றவாளிகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்ட தண்டனை விபரங்கள்!
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- குற்றவாளிகள் 15 பேருக்கு 220 வருட கடூழிய சிறைத்தண்டனை
Local
23 September 2026
மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககேவுக்கு பிணை
Local
22 September 2026
மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கல்வி – நாடளாவிய ரீதியில் 4,570 ஸ்மார்ட் பலகைகள்!
Local
22 September 2026
3x3x3 ரூபிக்ஸ் கியூப்: 6 வயது சிறுமி 3 நாட்களில் இருமுறை உலக சாதனை!
Local
22 September 2026
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது! - நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச சாடல்
Local
22 September 2026
தேசிய அடையாள அட்டைகளுக்காக 50 இலட்சம் அட்டைகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
Local
22 September 2026
ChatGPT, Claude, Grok-க்கு போட்டியாக Meta-வின் புதிய AI Agent 'MUSE'
Local
22 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்ப்பு! - 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு 9 பேர் விடுவிக்கப்பட்டனர்
Local
22 September 2026
ஆழிப்பேரலையில் காணாமல் போன மனைவியை 15 ஆண்டுகளாக கடலில் தேடும் கணவர்!
Local
22 September 2026